Maha
www.garudabazaar.com

ஐரோப்பா பைக் டூரை முடித்து சென்னை திரும்பிய அஜித்குமார்.‌. AIRPORT-ல் ரசிகர்களுடன் PHOTO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின்னர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

AK Ajith Kumar Returns to Chennai Viral Photos with Fans at Airport

Also Read | "தனுஷ்க்கு செட் ஆகுற சூப்பர் ஹீரோ??.." Russo Brothers சொன்ன அசத்தலான பதில்.. Behindwoods 'Exclusive'!!

அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில் தமிழகத்தில் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

AK Ajith Kumar Returns to Chennai Viral Photos with Fans at Airport

இந்நிலையில் நடிகர் அஜித் சென்னை விமான நிலையத்தில்  ரசிகர்களுடனும் அங்கு பணிபுரியும் ஊழியர்களுடனும் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. AK 61 படத்தின் அதே லுக்கில் தாடியுடன் காதில் கடுக்கனுடன் அஜித் காட்சியளிக்கிறார்.

AK Ajith Kumar Returns to Chennai Viral Photos with Fans at Airport

நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.

AK Ajith Kumar Returns to Chennai Viral Photos with Fans at Airport

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த AK61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் AK61 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

Also Read | கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் புதிய படம்..ரிலீஸ் எப்போ? வேற லெவல் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

AK Ajith Kumar Returns to Chennai Viral Photos with Fans at Airport

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Fans, Ajith Kumar with His Fans, AK 61 will find this news story useful.