www.garudabazaar.com

அஜித் நடிக்கும் 'துணிவு'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

Ajith Kumar AK Thunivu Trailer Release Date exclusive

Also Read | 'SURYA 42'.. சாதனை விலைக்கு மிக முக்கிய உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! செம்ம ரெக்கார்டு

இந்த படத்தின் போஸ்டர்கள் & சிங்கிள் பாடல்கள்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Ajith Kumar AK Thunivu Trailer Release Date exclusive

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Ajith Kumar AK Thunivu Trailer Release Date exclusive

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Ajith Kumar AK Thunivu Trailer Release Date exclusive

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பால சரவணன், பக்ஸ் பேட்டி அளித்துள்ளனர். அதில் "துணிவு படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ் ஏதேனும் தகவல் இருக்கா?. புத்தாண்டு அன்று மாலை டிரெய்லர் ரிலீஸ் ஆகுறதா கேள்விப்பட்டோம்" என்ற கேள்விக்கு நடிகர் பக்ஸ், "அப்படி தான் நாங்களும் கேள்விப்பட்டோம். அதுவும் மீடியாவில் இருந்து கேள்விப்பட்டது தான். துணிவு படக்குழுவில் இருந்து இல்லை" என பக்ஸ் கூறியுள்ளார்.

Also Read | VIDEO: நயன்தாராவுக்கு G.P. முத்து எழுதிய கடிதம்.. அவரோட ஆசையே இது தானாம்! EXCLUSIVE

அஜித் நடிக்கும் 'துணிவு'.. டிரெய்லர் ரிலீஸ் எப்போ? EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK Thunivu Trailer Release Date exclusive

People looking for online information on Ajith Kumar, AK, Thunivu, Thunivu Trailer will find this news story useful.