www.garudabazaar.com

அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தின் தெலுங்கு டைட்டில் இதுதான்! ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமாரின் துணிவு படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

Thunivu Telugu Tilted Tegimpu Poster Released

Also Read | போடு! அடுத்தடுத்த நாளில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் இரண்டு படங்கள்.. வேறமாரி!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் போஸ்டர்கள் & சிங்கிள் பாடல்கள்   ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது.

Thunivu Telugu Tilted Tegimpu Poster Released

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Telugu Tilted Tegimpu Poster Released

இந்த நிலையில், தெலுங்கில் துணிவு படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், துணிவு படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை IVY ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் எண்டெர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது.

Thunivu Telugu Tilted Tegimpu Poster Released

தெலுங்கில் இந்த படத்திற்கு (తెగింపు - Tegimpu) என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு தைரியம் (துணிவு) என அர்த்தம். துணிவு படத்தின் தெலுங்கு போஸ்டரும் தற்போது வெளியாகி உள்ளது.

Also Read | VARISU: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. முழுவீச்சில் டிக்கெட் கூப்பன் வினியோகம்!

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Telugu Tilted Tegimpu Poster Released

People looking for online information on Ajith Kumar, Tegimpu, Tegimpu Poster, Thunivu, Thunivu Telugu will find this news story useful.