www.garudabazaar.com

THUNIVU: கேங்ஸ்டர் லுக்கில் நடிகர் அஜித்.. மிரட்டலான போஸ்டருடன் வெளியான 3rd SINGLE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துணிவு' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Thunivu Third Single Song Gangstaa Lyrics Poster Released

Also Read | இந்த வாரம் கிறிஸ்துமஸ்-க்கு OTT- யில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்! முழு விவரம்

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Thunivu Third Single Song Gangstaa Lyrics Poster Released

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

Thunivu Third Single Song Gangstaa Lyrics Poster Released

ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் கேங்ஸ்டா என்ற பெயரில் அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் & பாடகர் சபீர் பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த கேங்ஸ்டா பாடல் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலின் லிரிக்கல் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Thunivu Third Single Song Gangstaa Lyrics Poster Released

மேற்கொண்டு ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் கருப்பு நிற உடையில் மிரட்டலான கேங்ஸ்டர் லுக்கில் அஜித் தோன்றியுள்ளார்.

Also Read | கிறிஸ்துமஸ்-க்கு தியேட்டரில் ரிலீஸாகும் முக்கிய திரைப்படங்கள்.. முழு லிஸ்ட்

தொடர்புடைய இணைப்புகள்

Thunivu Third Single Song Gangstaa Lyrics Poster Released

People looking for online information on Ajith Kumar, Gangstaa, Gangstaa Lyrics Poster, Thunivu, Thunivu Third Single Song will find this news story useful.