www.garudabazaar.com

அட.. நம்ம இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் !!! வைரலாகும் சிறுவயது ஃபோட்டோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Aditi Shankar Childhood image becomes viral அதிதி ஷங்கர்

Also Read | நோ மேக்கப்.. நோ பில்ட்டர்.. தனது லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு நடிகை குஷ்பு வைரல் பதிவு!

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

சமீபத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.  அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அத்துடன் இயக்குநர் ஷங்கர் குடும்பத்துடன் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகருக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை அதிதி ஷங்கர் அண்மையில் பகிர்ந்துள்ளார். இதில் இயக்குனர் ஷங்கர், அவரது மனைவி ஈஸ்வரி & மகன் அர்ஜித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் அதிதி ஷங்கரின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் இயக்குநர் ஷங்கர், தமது குடும்பத்தோடு இருக்கிறார். அதில் அதிதியும் சிறுமியாக இடம்பெற்றுள்ளார். இந்த த்ரோபேக் ஃபோட்டோ இப்போது வைரலாகி வருகிறது.

Also Read | விஜய் சேதுபதியுடன் ‘காந்தி டாக்ஸ்’ .. BTS ஃபோட்டோ பகிர்ந்து நடிகர் சொன்ன கமெண்ட்.!

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Shankar Childhood image becomes viral அதிதி ஷங்கர்

People looking for online information on Aditi Shankar, Shankar will find this news story useful.