www.garudabazaar.com

"தல அஜித்".. துணிவு ஸ்பாட்டில் மகாநதி சங்கரை பார்த்து அஜித் சொன்ன விஷயம்.. Exclusive!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahanadhi shankar About ajith kumar thunivu shooting spot

Also Read | “பூமர் அங்கிள்ன்னா என்ன?”.. மைனா சொன்ன விளக்கம்... டக்குனு பெயர் சொன்ன ஏடிகே.! Bigg Boss

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஜெயசுதா, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா உள்ளிட்ட ஏராளமானோர் இணைந்து நடித்துள்ளனர்.

வாரிசு படத்தில் இதுவரை 3 பாடல்கள் ரிலீஸ் ஆகி உள்ளது. இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நாளை (டிசம்பர் 24) நடைபெற உள்ளது.

 Mahanadhi shankar About ajith kumar thunivu shooting spot

அதே போல மற்றொரு முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் துணிவு திரைப்படமும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H வினோத் இயக்கி வருகிறார். மேலும் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். துணிவு படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில், 3 ஆவது பாடலும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 Mahanadhi shankar About ajith kumar thunivu shooting spot

இப்படி தமிழ் சினிமாவின் இரண்டு முன்னணி நடிகர்களான அஜித் குமார் மற்றும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆவதால் இருவரின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், Behindwoods TV சேனலில் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் ரசிகர்கள் பிரத்யேக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இதில், பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு அஜித் மற்றும் விஜய் ஆகியோர் குறித்து பல சுவாரஸ்ய கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர். அதில் பெசன்ட் ரவி மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

 Mahanadhi shankar About ajith kumar thunivu shooting spot

தல என அஜித் குமாரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் குறிப்பிட்டு வந்த நிலையில், கடந்த வருடம் தல என தன்னை குறிப்பிட வேண்டாம் என அஜித் தெரிவித்திருந்தார். முன்னதாக அஜித்தை 'தல' என முதலில் அழைத்தது மகாநதி சங்கர் தான். அஜித்தின் இந்த முடிவு குறித்து மகாநதி சங்கர் பேசுகையில், "துணிவு படம் ஸ்பாட்டுக்கு நான் போகும் போது அஜித் சார் என்ன கட்டி புடிச்சுட்டு ஒரு 10 நிமிஷம் விடல. அப்படியே கேமராமேன கூப்பிடுறாரு. 'இவர் தான் சார் என்ன முதல்ல தல-ன்னு கூப்பிட்டாரு'ன்னு அறிமுகப்படுத்தி வெச்சாரு.

உள்ளுக்குள்ள அவரு வேணாம்ன்னு சொன்னா கூட அவரா அத கேட்டு வாங்கல. தன்னால அமைஞ்சது தான் எல்லாமே" என மகாநதி சங்கர் தெரிவித்துள்ளார்.

Also Read | இப்ப தானே ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க.. திரும்பவும் முட்டிகிச்சா? விக்ரமன் Vs அசிம்.. bigg boss 6 tamil

"தல அஜித்".. துணிவு ஸ்பாட்டில் மகாநதி சங்கரை பார்த்து அஜித் சொன்ன விஷயம்.. EXCLUSIVE!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Mahanadhi shankar About ajith kumar thunivu shooting spot

People looking for online information on Ajith Kumar, Besant Ravi, Mahanadhi Shankar, Thunivu will find this news story useful.