Nenjuku Needhi

ரீல் செங்கேணியோடு ரியல் பார்வதியம்மா Ramp walk… Behindwoods Gold Medals 2022 விருது… நெகிழ்ச்சி தருணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 ஆவது Behindwoods Gold Medals Award மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் உள்ள island மைதானத்தில் நடந்துவருகின்றன.

Actress lijumol ramp walk with Parvathy amma in BGM 2022 awards

பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் விருதுகள்…

8 ஆவது Behindwoods Gold Medals Award விருது நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, நடிகர்கள் மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், நடிகை சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, தர்ஷா குப்தா, இயக்குனர்கள் வெங்கட் பிரபு, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், பாடகர்கள் அந்தோணி தாசன், ஜோனிதா காந்தி, கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மண் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஒரு பக்கம், நடன நிகழ்வுகளுக்கு மத்தியில், பல பிரபலங்கள் விருதினையும் வென்றிருந்தனர். லிஜோமோள் ஜோஸ், மணிகண்டன், ஆண்ட்ரியா, ஜோனிதா காந்தி, டான்ஸ் மாஸ்டர் ஜானி, யோகி பாபு, ஞானவேல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

Actress lijumol ramp walk with Parvathy amma in BGM 2022 awards

ரசிகர்களைக் கவர்ந்த Ramp walk…

இந்த விருது நிகழ்ச்சியில் பல உணர்வுப்பூர்வமான தருணங்கள் அரங்கேறின. கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய்பீம் பட கதாநாயகி லிஜோமோல் அவர் நடித்த செங்கேணி கதாபாத்திரத்திற்காக விருது பெற்றார். அவர் ஜெய்பீம் படத்தில் ஏற்று நடித்த செங்கேணி கதாபாத்திரத்தின் நிஜ வாழ்க்கை நபரான பார்வதி அம்மாவை அவர் மேடையில் சந்தித்தார். அப்போது இருவரும் மேடையில் ஒன்றாக Ramp walk செய்ய ரசிகர்கள் அதனை ஆர்ப்பரித்து வரவேற்றனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Actress lijumol ramp walk with Parvathy amma in BGM 2022 awards

ஜெய் பீம் குவித்த விருதுகள்…

இந்த விருதுவிழாவில் ஜெய்பீம் திரைப்படம் அதிகளவில் விருதுகளைக் குவித்தது. இந்த  படத்திற்காக நடிகர் மணிகண்டன் மற்றும் நடிகை லிஜோமோல் ஜோஸ், இயக்குனர் ஞானவேல் ஆகியோர் விருதுகளை வென்றிருந்தனர். கடந்த ஆண்டில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress lijumol ramp walk with Parvathy amma in BGM 2022 awards

People looking for online information on Lihomol jose, Suriya, T J Gnanavel will find this news story useful.