'விக்ரம்' படத்தில் சூர்யா.. பட விழா மேடையில் அறிவித்த கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ்! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

Suriya Doing a Role in Vikram Movie Confirmed by Kamal Lokesh

Also Read | அனிருத் இசையில் பிரம்மாண்டமாக வெளியான 'விக்ரம்' பட சூப்பர் பாடல்கள்.. இது வேற ரகம்!

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நேற்று மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இவ்விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் ப்ட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது.

Suriya Doing a Role in Vikram Movie Confirmed by Kamal Lokesh

இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் & கமல்ஹாசன் இப்படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதை உறுதி செய்தனர். லோகேஷ் இது குறித்து, "சொல்ல வேண்டான்னு நினைச்சேன், ஆனால் லீக் ஆகிடுச்சு.. சூர்யா சார் கூட இந்த படத்துல நடிச்சிருக்காரு" என கூறினார். இவ்விழாவில் கமல் ஹாசனும், "ஒரு தம்பிக்கு நன்றி சொல்ல கடைமை பட்டுருக்கிறேன்" என சூர்யாவுக்கு கமல் நன்றி கூறினார்.

Suriya Doing a Role in Vikram Movie Confirmed by Kamal Lokesh

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

Suriya Doing a Role in Vikram Movie Confirmed by Kamal Lokesh

தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள பாலா படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் விரைவில் துவங்க உள்ளது. சமீபத்தில் வெற்றிமாறன்  இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பிலும் சூர்யா கலந்து கோண்டார்.

Suriya Doing a Role in Vikram Movie Confirmed by Kamal Lokesh

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

Suriya Doing a Role in Vikram Movie Confirmed by Kamal Lokesh

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Kamal vikram audio launch, Lokesh Kanagaraj, Suriya, Vijay Sethupathi, Vikram Movie will find this news story useful.