Nenjuku Needhi

இது தான் 'விக்ரம்' பட சூர்யா கெட்டப்பா? வெளிவந்த BTS போட்டோ! சம்பவம் இருக்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

vikram movie suriya bts image went viral on instagram

விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

vikram movie suriya bts image went viral on instagram

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் கடந்த மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இவ்விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் பட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது.

vikram movie suriya bts image went viral on instagram

இவ்விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் & கமல்ஹாசன் இப்படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதை உறுதி செய்தனர். லோகேஷ் இது குறித்து, "சொல்ல வேண்டான்னு நினைச்சேன், ஆனால் லீக் ஆகிடுச்சு.. சூர்யா சார் கூட இந்த படத்துல நடிச்சிருக்காரு" என கூறினார். இவ்விழாவில் கமல் ஹாசனும், "ஒரு தம்பிக்கு நன்றி சொல்ல கடைமை பட்டுருக்கிறேன்" என சூர்யாவுக்கு கமல் நன்றி கூறினார்.

இந்நிலையில், சூர்யா உடன் நடிகர் ஜாபர் சாதிக் இருக்கும் புதிய BTS புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். போட்டோவுக்கு கேப்சனாக விக்ரம், விக்ரம், விக்ரம் என தலைப்பிட்டுள்ளார்.

vikram movie suriya bts image went viral on instagram

தற்காலிகமாக 'சூர்யா 41' என்று பெயரிடப்பட்டுள்ள பாலா படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. முதல் ஷெட்யூல் முடிந்து இரண்டாவது ஷெட்யூல் விரைவில் துவங்க உள்ளது. சமீபத்தில் வெற்றிமாறன்  இயக்கத்தில் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பிலும் சூர்யா கலந்து கொண்டார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

தொடர்புடைய இணைப்புகள்

vikram movie suriya bts image went viral on instagram

People looking for online information on Kamal Haasan, Lokesh, Suriya, Vijay Sethupathi, Vikram will find this news story useful.