www.garudabazaar.com

"டீசர் ரிலீஸ் ஆனப்போ கூட அத்தனை பேர் போன் பண்ணல".. ஸ்ரீ ரெட்டி குறித்து விஷால்... Exclusive!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். செல்லமே, சண்டக்கோழி, அவன் இவன், துப்பறிவாளன், இரும்புத் திரை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார் விஷால்.

Actor vishal about sri reddy issue explained exclusive

விஷால் நடிப்பில் அடுத்ததாக 'லத்தி' திரைப்படம், டிசம்பர் 22 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.

புதுமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் இந்த திரைப்படத்தில், விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். லத்தி படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரும் இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

லத்தி படத்தை தொடர்ந்து மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகர் விஷால் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தற்போது Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகர் விஷால் அளித்துள்ளார்.

Actor vishal about sri reddy issue explained exclusive

இதில், தன்னை சுற்றி அரங்கேறி இருந்த வதந்திகள் குறித்தும், அரசியல் குறித்தும், சினிமாவில் உள்ள தனது நண்பர்கள் உள்ளிட்டோர் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை விஷால் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னை பற்றி தெரிவித்த கருத்து பற்றி பேசி இருந்த விஷால், "என் டீசர் ரிலீஸ் ஆனப்ப கூட அத்தனை பேர் போன் பண்ணதில்லை. ஆனா திடீர்னு ஒரு ஃபோன், மச்சான் இந்த மாதிரி, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில நீ பயங்கர பேமஸ் ஆயிட்டேன் அப்படின்னு. நான் இப்ப எந்த படத்தோட விஷயமும் லான்ச் பண்ணலையே டா, எப்படின்னு நான் கேட்டேன். அப்புறமா ஸ்ரீ ரெட்டி பத்தி கேள்விப்படலையான்னு கேட்டான். நான் சொன்னேன் பார்க்கவே இல்லை அப்படின்னதும், வாட்ஸ் அப்ல என்னதுன்னு அனுப்புனாப்ல.

அப்பதான் நினைச்சேன். ஆனா அத அப்படியே விட்டுட்டேன். ஒரு ரெண்டு நாள் போட்டு புரட்டி எடுத்துட்டாங்க. ஸ்ரீ ரெட்டி விஷயம் பேசுறதுல எனக்கு விருப்பம் இல்லை. அது ஒரு மாதிரி வித்தியாசமான பப்ளிசிட்டி. அதனால எனக்கு பெருசா சந்தோஷமும் இல்லை" என தெரிவித்தார். அதே போல இந்த விஷயத்தை மிகவும் கூலாக தான் கடந்து அடுத்த வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தன்னை பற்றி வரும் சர்ச்சைகளை குடும்பத்தினர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது பற்றி பேசிய விஷால், "என்ன பத்தி என்ன சர்ச்சை வந்தாலும் என் அப்பா, அம்மா அதை பெருசா கண்டுக்க மாட்டாங்க. எங்க அப்பா ஒரு ஃபைல் வைத்திருக்கிறார். செல்லமே படத்தில் இருந்து என்னை பற்றி வந்த பேப்பர் கட்டிங் எல்லாம் சேர்த்து வச்சிருக்காரு. ஒருநாள் தூங்கி எழுந்து வரும் போது எங்க அப்பா எதோ சின்சியரா பேப்பர் கட்டிங் பண்ணிட்டு இருந்தாரு. அதைப் பத்தி கேட்டதும் இல்ல உனக்கும் பிரியாமணிக்கும் காதல்ன்னு போட்டு இருக்கு. அத பேப்பர் கட்டிங் பண்ணிட்டு இருக்கேன்னு சொன்னாரு. நாங்க அதனால Controversy பத்தி பெருசா எடுத்துக்க மாட்டோம்" என விஷால் கூறினார்.

Actor vishal about sri reddy issue explained exclusive

அதே போல, தற்போதைய செலிபிரிட்டி Date யார் என்பது பற்றி பதில் சொன்ன விஷால், ராஷ்மிகா மனிதனா பெயரை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"டீசர் ரிலீஸ் ஆனப்போ கூட அத்தனை பேர் போன் பண்ணல".. ஸ்ரீ ரெட்டி குறித்து விஷால்... EXCLUSIVE!! வீடியோ

Tags : Vishal

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actor vishal about sri reddy issue explained exclusive

People looking for online information on Vishal will find this news story useful.