www.garudabazaar.com

"மன்னிச்சிடு வைரவன்".. வெண்ணிலா கபடிகுழு நடிகரின் மறைவுக்கு விஷ்ணு விஷால் இரங்கல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு நடிகர் விஷ்ணு விஷால் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

Vishnu Vishal Condolence Tweet for Hari Vairavan Demise

2009 ஆம் ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் வெண்ணிலா கபடிகுழு.

விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்த இந்த படத்தில் அவருடன் அப்புகுட்டி, பரோட்டா முரளி, விஜய் சேதுபதி, சரண்யா மோகன், சூரி உட்பட பலர் நடித்து இருந்தார்கள்.

Vishnu Vishal Condolence Tweet for Hari Vairavan Demise

மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஹரி வைரவன்.  இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களிலும்  நடித்திருக்கிறார்.

ஹரி வைரவன் இன்று நடு இரவில் 12.30 மணியளவில் மரணம் அடைந்துள்ளார். மதுரையை சார்ந்த ஹரி வைரவன் மரணம் ரசிகர்கள் & சக நடிகர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள கடச்சனேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹரி வைரவன் உடல்  வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெண்ணிலா கபடிகுழு படத்தில் கதாநாயகனாக நடித்த விஷ்ணு விஷால், தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் ஹரி வைரவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "மன்னிக்க வைரவன், உன் ஆன்மா சாந்தி அடையட்டும். வெண்ணிலா கபடிகுழு படத்திலிருந்து உன் நினைவுகள் எப்போதும் இருக்கும்" என ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal Condolence Tweet for Hari Vairavan Demise

People looking for online information on Hari, Hari vairavan, Vishnu Vishal will find this news story useful.