www.garudabazaar.com

'கட்டா குஸ்தி' பிஸினஸ் மட்டும் இத்தனை கோடியா? விஷ்ணு விஷால் சொன்ன சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.

Vishnu Vishal talked about Gatta Kusthi Movie Business Collection

Also Read | “திருமணம் ஆகி அமெரிக்காவில செட்டில் ஆகிட்டேன்னு!”.. திருமணம் குறித்து மனம் திறந்த அஞ்சலி Exclusive

இவர் வெண்ணிலா கபடிக்குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்ததோடு, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கதா நாயகன், சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவரான விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக 'எஃப்ஐஆர்' படம் வெளியானது.‌

Vishnu Vishal talked about Gatta Kusthi Movie Business Collection

இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது.பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்,  “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கினார்.‌

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்தனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது விஷ்ணு விஷால் & 'பொன்னியின் செல்வன் பூங்குழலி'  ஐஸ்வர்யா லெஷ்மி நடிக்கும் கட்டா குஸ்தி படம் கடந்த (02.12.2022) அன்று வெளியாகி உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தையும் ரிலீஸ் செய்துள்ளது.

விஷ்ணு விஷால் நடிக்கும் இந்த படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

Vishnu Vishal talked about Gatta Kusthi Movie Business Collection

இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்குகிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்கத்தை உமேஷ் மேற்கொள்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் வடிவமைத்து உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், கட்டா குஸ்தி படத்தின் பிஸினஸ் 30+ கோடிக்கும் மேல் வியாபாரத்தை தாண்ட உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இந்த வருடத்தில் FIR & கட்டா குஸ்தி இரண்டு படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது தனது கைவசம் 9 படங்கள் இருப்பதாக கூறினார்.

Also Read | "எனக்கு இன்னொரு பெயர் இருக்கு".. வைரலாகும் ஆர்யாவின் ட்வீட்! பதில் அளித்த பிரபலங்கள்

'கட்டா குஸ்தி' பிஸினஸ் மட்டும் இத்தனை கோடியா? விஷ்ணு விஷால் சொன்ன சூப்பர் தகவல்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vishnu Vishal talked about Gatta Kusthi Movie Business Collection

People looking for online information on Gatta Kusthi, Gatta Kusthi Movie Business Collection, Vishnu Vishal will find this news story useful.