சீரியல் நடிகையின் ஃபோட்டோவை மாஃர்ப் செய்து வெளியிட்ட இளைஞர் பரபரப்பு கைது..!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகை பிரவீணா, தமிழ் & மலையாள மொழியில் நடிகையாக வலம் வருபவர்.

தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, சாமி-2, லாபம், கோமாளி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் வாத்தி படத்திலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களிலும் பிரவீணா நடித்து வருகிறார். தற்போது ராஜா ராணி, சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் புதிய மெகா தொடரான இனியா தொடரிலும் நடித்து வருகிறார்.
இச்சூழலில் தன்னையும் தனது மகளையும் மார்பிங் செய்து போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பாக்கியராஜ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அந்த நபர் ஜாமினில் வெளிவந்து, பழிவாங்கும் நோக்கில் தன்னையும், தனது மகள் மற்றும் குடும்பத்தினரை மார்பிங் செய்து புகைப்படங்களை பரப்புவதாக நடிகை பிரவீணா கேரள சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார்.
மேலும் தனது குடும்பத்தினர் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி உள்ளார் என்றும் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக நாக்பூரை சேர்ந்த பாக்கியராஜ் என்ற இளைஞரை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சீரியல் நடிகையின் ஃபோட்டோவை மாஃர்ப் செய்து வெளியிட்ட இளைஞர் பரபரப்பு கைது..! வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- Hey Alya, வழுக்கபோகுது, பார்த்து வா😮உதவிய Praveena, Raja Rani 2
- Raja Rani 2 Sivagami வீட்டில் நடந்த சோகம் | Praveena
- ஆள விடுங்கடா சாமி🤣... எனக்கு CAKE வேண்டாம்... அடம்பிடித்த Sidhu 😂🤩 | Raja Rani Celebration
- Praveena | Unseen, Rare And Old Pictures Of Top Actresses - Unmissable Gallery Here! - Slideshow