Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

கேரளாவில் மாஸ் காட்டும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.. வேற மாரியான சம்பவம் இது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Housefull shows for PS1 Ponniyin Selvan in Kerala

Also Read | BREAKING: அருண் விஜய் நடிக்கும் புதிய படம்.. லண்டனுக்கு பிறகு இந்த ஊர்லயா ஷூட்டிங்? செம அப்டேட்

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” வெளியானது முதல் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில், உலகம் முழுவதும் சுமார் 80 கோடி வசூல் செய்ததாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், உலக அளவில் ஒரு தமிழ்ப்படம் செய்த அதிக வசூலும் இது தான் என்றும் லைகா நிறுவனம் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் கேரளாவில் இன்று திங்கட்கிழமை (அக்டோபர், 3) அரங்கு நிறைந்த காட்சிகளாக பெரும்பாலான இடங்களில் திரையிடப்படுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. பொன்னியின் செல்வன் படத்தின் கேரள ரிலீஸ் உரிமத்தை கோகுலம் ஸ்டூடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்  படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், கிஷோர், சோபிதா, ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் TV ஒளிபரப்பு உரிமம்.. கைப்பற்றிய முன்னணி தமிழ் சேனல்! போடு வெடிய

தொடர்புடைய இணைப்புகள்

Housefull shows for PS1 Ponniyin Selvan in Kerala

People looking for online information on Housefull shows, Kerala, Ponniyin Selvan 1 will find this news story useful.