Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

ரூ 3000 கோடி பணப்புழக்கம்.. TOP நடிகர்களின் படப்பிடிப்பால் மகிழ்ச்சியில் சினிமா தொழிலாளர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பால்  சினிமா தொழிலாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamil Cinema Top Heros Movie Shooting Fefsi workers are happy

Also Read | கேரளாவில் மாஸ் காட்டும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.. வேற மாரியான சம்பவம் இது!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படப்பிடிப்புகள் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பகுதிகளில் நடந்து வருகிறது.

Tamil Cinema Top Heros Movie Shooting Fefsi workers are happy

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொடங்கிய நிலையில், கடந்த ஆகஸ்டு மாதத்தின் கடைசி வாரத்தில் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Top Heros Movie Shooting Fefsi workers are happy

அதேபோல் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்- 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் நடைபெற்று வருகிறது. சிலநாட்களுக்கு முன் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்தது. மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் துணிவு படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Top Heros Movie Shooting Fefsi workers are happy

அதே போல் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் துவங்கி விசாகப்பட்டினம் & சென்னை நகரில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. தற்போது வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு எண்ணூர் பகுதியில் நடந்து வருகிறது.

அதே போல் நடிகர் சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படத்தின் பூஜை & படப்பிடிப்பு சென்னையில் கடந்த மாதம் துவங்கியது. சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை திஷா பட்டாணி பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Top Heros Movie Shooting Fefsi workers are happy

அதேபோல் நடிகர் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இதற்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் தனுஷ் வந்திறங்கிய வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் ஜான் கொக்கன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்காசி படப்பிடிப்பு குறித்து பதிவிட்ட புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. அதற்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் காரைக்குடி பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

ஒரே சமயத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பு நடந்து வருவதால் பெஃப்சி சினிமா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 3000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்புழக்கம் இந்த படங்களின் படப்பிடிப்பு காரணமாக தமிழகத்திற்கு கிடைத்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | புது ஹேர்ஸ்டைலில் முறுக்கு மீசையுடன் கமல்.. இந்தியன் - 2 படத்தின் STYLIST பகிர்ந்த BTS PHOTO!

Tamil Cinema Top Heros Movie Shooting Fefsi workers are happy

People looking for online information on Fefsi workers, Tamil Cinema Top Heros Movie will find this news story useful.