Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

Brahmastra : 2022-ல் உலகளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனில் சம்பவம் செய்த முதல் ஹிந்தி படம் பிரம்மாஸ்திரா.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில்  செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தில் நாகார்ஜூனா மற்றும் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்கள். தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

Ranbir Alia Bhatt Brahmastra Worldwide Box Office ₹425 Cr

அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து வெளியிட்டனர். இந்த படத்தை தென்னிந்தியாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி வெளியிட்டார். 

முன்னதாக சென்னையில் நடந்த இப்படத்தின் ப்ரோமோஷன் விழாவில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி பேசும்போது, “இந்த வருட இந்திய திரைப்பட வரலாற்றில் பிரமாஸ்திரம் திரைப்படம் முக்கியமானதாக திகழும். நம் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இருந்து உருவான கற்பனை கதைதான் இந்த திரைப்படம். கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் பங்களிப்பினால் இப்படம் 8 வருட கடின உழைப்புக்கு பின் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை பற்றி கமர்சியலாக அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம் எடுத்துரைக்கிறது. நானும் இந்த திரைப்படத்தில் இணைந்ததில் மகிழ்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதே போல் இப்படம் குறித்து இயக்குனர் அயன் முகர்ஜி கூறுகையில், “கடந்த 10 வருடங்களாக என்னுள் வாழ்ந்த கதை இது. குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாட ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும், இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்தது போல் இல்லாத சினிமா அனுபவத்தையும், சாகசங்கள் நிறைந்த பயணமாகவும், உணர்வுப்பூர்வமான இதயம் நிறைக்கும் படைப்பாகவும், இப்படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாஸ்திரத்தை அதிநவீன தொழில்நுட்பத்துடன், ஒவ்வொரு காட்சியையும், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில், உலகளாவிய பாப் கலாச்சார நிகழ்வுக்கு இணையானதாக உருவாக்கியுள்ளோம். ” என்று தெரிவித்திருந்தார்.

இந்திய புராணங்களில் ஆழமாக வேரூன்றிய கருத்துக்கள் மற்றும் கதைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த பின்னணியில் நவீன உலகிற்கான கதையாக அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, என அனைத்தும் அதிநவீன மற்றும் VFX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ரிலீஸ் ஆன, இப்படம் 25 நாட்கள் ஓடி, உலக அளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனாக 425 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும், 2022-ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூலை இதுவரை ஈட்டியுள்ள முதல் இந்தி படமாக பிரம்மாஸ்திரா திரைப்படம் திகழ்வதாகவும் குறிப்பிட்டு இப்படத்தின் இயக்குநர் அயன் முகர்ஜி பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ranbir Alia Bhatt Brahmastra Worldwide Box Office ₹425 Cr

People looking for online information on Alia Bhatt, Brahmastra Part One – Shiva, Ranbir Kapoor will find this news story useful.