RRR Others USA
www.garudabazaar.com

"தம்பி.. நீங்க ஒன்னும் குழந்தை கிடையாது!".. BiggBoss இப்படிலாம் பேசுவாரா? ராஜூவுக்கே Thuglife-ஆ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில், எல்லாரையும் கலாய்க்கும் ராஜூவை பிக்பாஸ் கலாய்த்து தொங்க விட்ட தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

you are not a kid biggboss mass thuglife to raju viral

பிக்பாஸ் வீட்டில் கிராண்ட் ஃபினாலே டாஸ்க் நடைபெற்றது. இதன் 2வது டாஸ்க்கில், குறிப்பிட்ட போட்டியாளர்களை ஒவ்வொரு போட்டியாளரும் குறிப்பிட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் அந்த போட்டியாளரின் உருவப்படத்தின் மீது கலர் முட்டையை வீசி அடிக்க வேண்டும்.

முன்னதாக தாமரை மற்றும் பிரியங்கா இருவருக்குமே ஒருவரை ஒருவர் பிடிக்காது. ஆனால், இருவரும் டாஸ்க்கின் போது மட்டுமே சண்டை போட்டுக் கொள்வதாகவும், மற்ற நேரங்களில் கட்டி உருளுகிறார்கள் என்றும் சொல்லி ராஜூ பிரியங்காவின் உருவம் மீது முட்டையை வீசினார்.

பின்னர், அன்பை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்பவர் யார் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. இந்த கேள்வியை எப்படியோ புரிந்துகொண்டு, கலர் முட்டயை ராஜூ முதலில் வீசிவிட்டார். ஆனால், அதன் பின்னர் ஒவ்வொரு போட்டியாளரும் இந்த கேள்வியை அனாலிசஸ் செய்து பார்த்து முட்டையை வீசினர்.

இதை கவனித்து கொண்டிருந்த ராஜூ, கொஞ்ச நேரத்தில் புலம்பத் தொடங்கினார். “ஐய்யய்யோ.. நான் இந்த கேள்வியை சரியா புரிஞ்சுக்காம போயிட்டேனே? பிக்பாஸ்... எனக்கு இன்னொருமுறை சான்ஸ் கிடைக்குமா? நான் இந்த கேள்வியை சரிவர புரிந்துகொள்ளவில்லை. இப்போதுதான் புரிகிறது” என்று ஒரு 2,3 முறை கேட்டுக்கொண்டே இருந்தார்.

அப்போது, சில நாழிகை கழித்து, ராஜூவிடம் பேசிய பிக்பாஸ் “ராஜூ.. நீங்க குழந்தை கிடையாது. பேசுவதும் தமிழில் தான் பேசுகிறோம். ஒரு தடவை யோசிச்சு முட்டையை வீசிட்டா உங்க பேச்சை நீங்களே கேக்க முடியாது!” என்று பஞ்ச் வேறு பேசினார். இப்படி Thuglife மன்னன்  ராஜூவையே நம்ம பிக்பாஸ் வெச்சு செய்த விஷயம் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் கலகலப்பாக மாறிப்போனது.

you are not a kid biggboss mass thuglife to raju viral

People looking for online information on BiggBoss Trending, BiggBoss5, BiggBossTamil5, Raju, Thuglife, Vijay tv will find this news story useful.