RRR Others USA
www.garudabazaar.com

ரிலீசான முதல் நாளே OTT-யில் சாதனை படைத்த தனுஷ் நடித்த புதிய படம்! என்ன சாதனை தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் இந்தியில் மீண்டும் நடித்துள்ள படம் அத்ரங்கி ரே.

Dhanush Atrangi Re Movie Breaks Record on Day Streaming

ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தின் மூலம் நடிகர் தனுஷை 2013 ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகப்படுத்திய  இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இந்த படத்தை இயக்கியுள்ளார். மதுரை மற்றும் வட இந்திய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தை டி-சீரிஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், கலர் யெல்லோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

Dhanush Atrangi Re Movie Breaks Record on Day Streaming

நடிகை சாரா அலிகான், நடிகர் அக்ஷய் குமார் தனுஷடன் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் தமிழ் வெளியீட்டிற்கு கலாட்டா கல்யாணம் என பெயரிடப்பட்டுள்ளது. அத்ரங்கி ரே’ படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் சென்ற டிசம்பர் மாதம் 24 ஆம் நாள் கிறிஸ்மஸ் பாண்டிகையை முன்னிட்டு வெளியானது‌.

வெளியான முதல் நாளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் அதிக பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை அத்ரங்கி ரே படம் பெற்றுள்ளது. இதனை டி சீரிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது. 

Dhanush Atrangi Re Movie Breaks Record on Day Streaming

இந்த படம் முடிந்த பின்னர் வழக்கம் போல a film by என இயக்குனரின் பெயர் இடம் பெறும். அது தான் உலக சினிமாக்களில் வாடிக்கையான நிகழ்வு. ஆனால் இந்த கலாட்டா கல்யாணம் எனும் Atrangi Re படத்தில் a film by என இசைப்புயல் A. R. Rahman அவர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமாவில் அரிய நிகழ்வான இதை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Atrangi Re Movie Breaks Record on Day Streaming

People looking for online information on A R Rahman, ARR, Atrangi Re Movie Dir Anand L Rai, தனுஷ், Dhanush, Music Director will find this news story useful.