www.garudabazaar.com

படப்பிடிப்பில் கைகலப்பு! திடீரென மோதிக்கொண்ட யோகிபாபுவின் டிரைவர் மற்றும் உதவியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போடி, குரங்கணி மலைப்பகுதிகளில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடித்துவரும் மலையோரம் வீசும் காற்று படப் பிடிப்பு தளத்தில் கைகலப்பு ஆகியுள்ளது.  இதில், நடிகர் யோகி பாபுவின்  உதவியாளரும் கார் டிரைவரும் திடீரென்று மோதிக்கொண்டதில் உதவியாளர் காயம் அடைந்ததால், சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது

clash in yogi babu film shoot between driver and assistant

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் குரங்கணி, கொட்டகுடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் மலையோரம் வீசும் காற்று என்ற படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் யோகி பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் குரங்கணி மலைப்பகுதியில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது.

clash in yogi babu film shoot between driver and assistant

நேற்று 14-12-2021 அன்று குரங்கணி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது யோகி பாபுவின் உதவியாளர் சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த  சதாம் உசேன் (வயது 35, தகப்பனார் பெயர் முஸ்தபா), மற்றும் யோகி பாபுவின் கார் டிரைவர்  சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 31 தகப்பனார் பெயர் குமார்) ஆகிய இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

clash in yogi babu film shoot between driver and assistant

ஒருவருக்கொருவர் ஆவேசமாக திட்டிக்கொண்டு திடீரென்று கைகலப்பில். ஈடுபட்டனர். இருவரும் மோதிக் கொண்டதில் யோகி பாபுவின் உதவியாளர்  சதாம் உசேனை கார் டிரைவர் ராமச்சந்திரன் மூக்கில் குத்தியதால் ரத்தக் காயம் ஏற்பட்டதாக யோகி பாபுவின் உதவியாளர் சதாம் உசேன் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

clash in yogi babu film shoot between driver and assistant

இதனையடுத்து குரங்கணி  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். படப்பிடிப்பில் நடந்த எதிர்பாராத இந்த மோதல் சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பில் கைகலப்பு! திடீரென மோதிக்கொண்ட யோகிபாபுவின் டிரைவர் மற்றும் உதவியாளர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

clash in yogi babu film shoot between driver and assistant

People looking for online information on Yogi Babu, Yogi Babu driver, Yogi Babu theni will find this news story useful.