யோகி பாபு டைமிங்கில் சரவெடி ! - ''தளபதி தான்..... நீ பேசுன பேச்சுக்கு.... பொண்ணு ரெடி... ''
முகப்பு > சினிமா செய்திகள்யோகி பாபு சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடித்த 'தர்பார்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, சந்தோஷ் சிவன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் தாரா, பால் ஒன்றை காண்பித்து இதனை பார்த்ததும் யார் நியாபகம் வருகிறார்கள் என்று கேட்டார். அதற்கு யோகி பாபு சற்றும் தாமதிக்காமல் 'தளபதி தான்' என்றார்.
பின்னர் மேடையில் பட்டாணி சாப்பிட்டுட்டு இருந்தீங்க, ரொம்ப பசியா என்று தொகுப்பாளர் கேட்க, அதற்கு அவர்,'' நீ பேசுன பேச்சுக்கு சரக்கே அடிக்கலாம் பட்டாணி தான'' என்றார். அப்போது சிரிப்பலைகளால் அரங்கமே அதிர்ந்தது.
யோகி பாபு டைமிங்கில் சரவெடி ! - ''தளபதி தான்..... நீ பேசுன பேச்சுக்கு.... பொண்ணு ரெடி... '' வீடியோ