துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' ரிலீஸ் பற்றிய அறிவிப்பு இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா  நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்துக்கு ரதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

Chiyaan Vikram’s son Dhruv Adithya Varma to release on November 8

தமிழில் இந்த படம் 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இந்த படத்தை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துவருகிறார்.  இந்த படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார். இந்த படத்தை கிரீசயா இயக்குகிறார்.

இந்த படத்தை E4 Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து எதற்கடி வலி தந்தாய் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுது  இந்த பாடலை விவேக் எழுத, துருவ் விக்ரம் இந்த பாடலை பாடியுள்ளார்.தற்போது  இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகியள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியாகஉள்ளது.