RRR Others USA
www.garudabazaar.com

விஜய்யின் பீஸ்ட்.. வெளிநாட்டில் ஒரு நாள் முன்பே ரிலீசா? உண்மை என்ன? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay Starring Beast Movie USA Premiere on April 12 2022

வலிமை படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

பீஸ்ட் சண்டைக்காட்சி படப்பிடிப்புக்கு டில்டா ரிக்கை பயன்படுத்துவதாகவும், ரெட் நிறுவன கொமோடோ கேமராக்களுக்கு இந்த ரிக் சிறப்பாக இருப்பதாகவும்,பீஸ்ட் படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு ரெட் நிறுவனத்தின் புதிய வரவான RED RAPTOR வகை கேமராவை இந்தியாவிலேயே முதல் முறையாக பயன்படுத்துவதாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார். இந்த ரெட் ராப்டர் வகை கேமராவின் சிறப்பம்சமாக Slow Motion வீடியோக்களை துல்லியமாக 8K Resolution கொண்டு எடுக்கலாம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Vijay Starring Beast Movie USA Premiere on April 12 2022

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் அமெரிக்க வினியோகஸ்தரான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் & அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர்.

Vijay Starring Beast Movie USA Premiere on April 12 2022

இந்நிலையில் பீஸ்ட் படம் திட்டமிட்ட ஏப்ரல் 13 ஆம் தேதிக்கும் ஒரு நாள் முன்பே அமெரிக்காவில் ஏப்ரல் 12 அன்று வெளியாக உள்ளது.  அமெரிக்க நேரப்படி பீஸ்ட் படம் ஏப்ரல் 12, மாலை 4.30 மணிக்கு  முதற்காட்சி துவங்குகிறது.

Vijay Starring Beast Movie USA Premiere on April 12 2022

இந்திய நேரப்படி அதிகாலை 4 மணி (ஏப்ரல் 13) மணிக்கு அமெரிக்காவில் பீஸ்ட் படம் திரையிடப்படுகிறது.  ஆகையால் அமெரிக்க - இந்திய நேர வேறுபாடு காரணமாக பீஸ்ட் திரைப்படம் முன்கூட்டியே ஏப்ரல் 12 அன்று வெளியாவது போல தெரிகிறது.

RRR படத்தை தொடர்ந்து பீஸ்ட் படத்தின் உரிமத்தை கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்! இது வேற லெவல்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Beast Movie USA Premiere on April 12 2022

People looking for online information on Anirudh Ravichander, Beast, Beast Movie USA Premiere, Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Vijay will find this news story useful.