www.garudabazaar.com

LATEST: பொன்னியின் செல்வன் படத்தின் வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படங்கள்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து "பொன்னியின் செல்வன்" படத்தை தயாரிக்கின்றன.

ponniyin selavan bts picture went viral on social media

சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. முழு வீச்சில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத் நகரங்களில் முடிந்த பின், தற்பொழுது படக்குழு மத்திய பிரதேசத்தில் உள்ள ஆர்ச்சா, குவாலியர், மகேஸ்வர் நகரங்களுக்கு சென்றுள்ளது.

ponniyin selavan bts picture went viral on social media

அங்கு படப்பிடிப்பில் எடுத்த BTS புகைப்படங்களை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் மகேஸ்வர் கோட்டையும், இரண்டு சைவ, வைணவ பிராமணர்களும் உள்ளனர். 

ponniyin selavan bts picture went viral on social media

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது.

ponniyin selavan bts picture went viral on social media

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

 

 

ponniyin selavan bts picture went viral on social media

People looking for online information on Maniratnam, Ponniyin Selvan will find this news story useful.