RRR Others USA
www.garudabazaar.com

மீண்டும் இந்தியா முழுதும் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் KGF முதல் பார்ட்.. முழு தியேட்டர் லிஸ்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இந்தியா முழுவதும் கே ஜி எப் படத்தின் முதல் பாகம் மீண்டும் ரிலீசாக உள்ளது.

Yash KGF Movie First Part Re Releasing On April 08 2022

BEAST படத்தின் அடுத்த SONG.. Meaner, Leaner, Stronger ரிலீஸ் எப்போ? சன் பிக்சர்ஸ் கொடுத்த வேறலெவல் தகவல்

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் 2'. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி, இந்திய அளவில் வசூலை வாரி குவித்தது. இதனையடுத்து ‘கே ஜி எஃப் 2’  திரைப்படம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இதனையடுத்து பெங்களூரூவில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Yash KGF Movie First Part Re Releasing On April 08 2022

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

Yash KGF Movie First Part Re Releasing On April 08 2022

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

Yash KGF Movie First Part Re Releasing On April 08 2022

இந்நிலையில் KGF படத்தின் தொடர்ச்சியான KGF Chapter 2 இரண்டாம் பாகம் வெளியாவதை  ஒட்டி அதன் முதல் பாகமும் தற்போது திரையரங்கில் ரிலீசாகி உள்ளது. சென்னையில் தமிழ் வெர்சன் எஸ்கேப், பிவிஆர் அம்பா, PVR ECR மால்களில் நாளை (08.04.2022) முதல் ரிலீசாகிறது. கோயம்புத்தூர் ப்ரூக் பீல்ட், மதுரை ஐநாக்ஸ், கோபுரம் சினிமாசிலும் இந்த படம் ரிலீசாக உள்ளது.

மிகவும் கஷ்டமான உடற்பயிற்சி செய்த பிரபல நடிகை..பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே..!

தொடர்புடைய இணைப்புகள்

Yash KGF Movie First Part Re Releasing On April 08 2022

People looking for online information on KGF Movie First Part, KGF2, Prashanth Neel, Yash will find this news story useful.