Beast BWE News
www.garudabazaar.com

KGF Chapter 2 படத்தின் கதை இது தான்! பிரிட்டிஷ் அரசின் Censor Board வெளியிட்ட மிரட்டல் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது.

KGF Chapter 2 Movie Story Revealed from British BFC

இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ரவி பஸுரூர் இசையமைத்திருக்கிறார்.

KGF Chapter 2 Movie Story Revealed from British BFC

கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது. உலகம் முழுவதும் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரிட்டிஷ் நாட்டின் சென்சார் போர்டு கே.ஜி.எஃப் ப்டத்தின் கதையை வெளியிட்டுள்ளது. அதில், கதையாக "KGF PART 2 என்பது கன்னட மொழி ஆக்‌ஷன் நாடகத்தின் தொடர்ச்சி, இதில் ஒரு மனிதன் ஒரு தங்கச் சுரங்கத்தையும், அங்கு வேலை செய்யும் முன்னாள் அடிமைகளையும் இரக்கமற்ற எதிரியிடமிருந்து பாதுகாக்கிறான்". என அறிவிக்கப்பட்டுள்ளது. 

KGF Chapter 2 Movie Story Revealed from British BFC

மேலும் 15 வயதுக்கு மேற்ப்பட்டவ்ர்களுக்கான படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

KGF Chapter 2 Movie Story Revealed from British BFC

People looking for online information on BBFC, KGF Chapter 2, Yash will find this news story useful.