www.garudabazaar.com

“உங்க குழந்தைக்கு அப்பா யார்?”.. நடிகை சொன்ன சர்ச்சை பதில்.. ஆடிப்போன ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல வங்காள நடிகை  தன் குழந்தை எங்கே என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு கூறிவந்த பதில்கள் சர்ச்சைக்குரிய வகையில் வைரலாகி வருகின்றன.

who is your babys father Nusrat Jahan controversy answer

முன்னதாக கர்ப்பமாக இருந்த நடிகையும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருப்பவருமான நஸ்ரத் ஜகான் அண்மையில்தான் ஒரு குழந்தைக்கு தாயாகினார். அவர் மருத்துவமனையில் இருந்து பிரசவம் ஆன பிறகு குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பும்போது கூட பத்திரிகையாளர் சந்திப்பில் பலரும் அவரிடம் பேசவும் புகைப்படம் எடுக்கவும் செய்தனர்.

இந்நிலையில் தற்போது, அந்த குழந்தை எங்கே என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அதை குழந்தையின் அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். இப்போதைக்கு குழந்தையை பொது உலகிற்கு காட்ட வேண்டாம் என குழந்தையின் அப்பா கூறி, குழந்தையை பாதுகாப்பாய் வளர்த்து வருகிறார்.

அவர் தான் குழந்தையை பொதுவெளியில் அறிமுகப்படுத்த வேண்டாம் என்றும் கூறுகிறார்” என தெரிவித்துள்ளார் நஸ்ரத் ஜகான்.

இதைத் தொடர்ந்து, “சரி குழந்தையின் அப்பாதான் யார்?” என கேட்டதற்கு, அதற்கும் நடிகை நஸ்ரத் ஜகான்,  “அது குழந்தையின் அப்பாவுக்கு தெரியும். அவருக்கு தெரிந்தால் போதும்” என்பது போல் கூற, “ஆனால் அவர் யாரென்று எங்களுக்கு தெரியாதே” என தொடர்ந்து கேட்க, “அது குழந்தையின் அப்பாவுக்கு தெரியும்!” என்று பதில் அளித்துள்ளார்.

நடிகை நஸ்ரத் ஜகான் தன் குழந்தையின் தந்தையின் பெயரை எங்கேயும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில்தான் பொதுப்புத்தியில் ஒரு தனிநபரின் குழந்தை யார்?, அந்த குழந்தையின் தந்தை யார்? என ஊடகங்களும் இணையவாசிகளும் நிற்கவைத்து கேள்வி கேட்பதையெல்லாம் மறைமுகமாக விமர்சித்துள்ளார் என பலரும் கருத்து கூறி வருகின்றனர்.

“உங்க குழந்தைக்கு அப்பா யார்?”.. நடிகை சொன்ன சர்ச்சை பதில்.. ஆடிப்போன ரசிகர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

who is your babys father Nusrat Jahan controversy answer

People looking for online information on Actress, Baby, Bollywood, Controversy, Nusrat Jahan will find this news story useful.