www.garudabazaar.com

கைதி, மாஸ்டர் பட எழுத்தாளர் இயக்கத்தில் நடிக்கப்போகும் நடிகை ஜோதிகா!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது நடிகை ஜோதிகா கத்துக்குட்டி பட இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் "உடன்பிறப்பே" படத்தில் சசிக்குமாருடன் நடித்து வருகிறார்.

master fame will direct actress jyothika next movie

அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளிவர இருக்கிறது. சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் வருகிற அக்டோபர் மாதம்  வெளியாக உள்ளது. தஞ்சாவூர் பகுதியில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

master fame will direct actress jyothika next movie

இந்த படத்தை தொடர்ந்து நடிகை ஜோதிகா, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் படம் நடிக்க உள்ளார். இந்த படத்தை எழுத்தாளர் பொன் பார்த்திபன் இயக்குகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன் பார்த்திபன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜூடன் கைதி, மாஸ்டர் படங்களில் பணியாற்றி உள்ளார். மேலும் இயக்குனர் மித்ரனுடன் இரும்புத்திரை, ஹீரோ படங்களில் பணியாற்றியுள்ளார்.

master fame will direct actress jyothika next movie

தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த படத்தை மித்ரன் இயக்குகிறார். விஷால் நடிக்கும் விஷால்32 படத்திலும் பொன் பார்த்திபன் பணியாற்றுகிறார்

 

 

 

 

 

 

Tags : Jyothika

master fame will direct actress jyothika next movie

People looking for online information on Jyothika will find this news story useful.