www.garudabazaar.com

BREAKING: வடிவேலு - சுராஜ் - லைகா இணையும் புதிய படத்தின் பூஜை எப்போ தெரியுமா? வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

.நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கம் போட்ட ரெட் கார்டு சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டது.

Actor Vadivelu Director Suraj Lyca movie latest update

 இந்நிலையில், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தலைநகரம், மருதமலை, படிக்காதவன் படங்களை இயக்கியவர். இந்த புதிய படத்திற்கு  'நாய் சேகர்' என பெயர் வைப்பதாக வடிவேலு சமீபத்தில் அறிவித்தார்.

Actor Vadivelu Director Suraj Lyca movie latest update

இந்த நாய் சேகர் தலைப்பை நடிகர் சதீஷ் நடித்து ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்காக ஏற்கனவே பதிவு செய்துள்ளதால் வடிவேலு நடிக்கும் இந்த படத்திற்கு இந்த டைட்டிலை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

Actor Vadivelu Director Suraj Lyca movie latest update

இந்நிலையில் வடிவேலு - சுராஜ் இணையும் இந்தப் படத்தின் பிரத்யேக பூஜை நாளை (10.09.2021) விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகிறது. மேலும் இந்த படத்திற்கான சிறப்பு போட்டோ சூட் வடபழனி ஏ வி எம் ஸ்டூடியோவில் இன்று (09.09.2021) நடைபெற்றதாகவும் அதனை புகைப்பட கலைஞர் தர்மசந்துரு படம் எடுத்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags : Vadivelu, Suraj

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vadivelu Director Suraj Lyca movie latest update

People looking for online information on Suraj, Vadivelu will find this news story useful.