www.garudabazaar.com

அசத்தல்.. வேற லெவல் Reels Video! ஷங்கர் - ராம் சரண் பட விழாவில் கெத்தாக நடை போட்ட நடிகை அதிதி ஷங்கர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஷங்கர், நடிகர் ராம் சரணின் 15வது படத்தை இயக்குகிறார். #RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.

Aditi Shankar viral reels video RC15 event அதிதி ஷங்கர்

ஜானி மாஸ்டர் நடனம் அமைக்கும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்க, இந்த படத்தின் கோலாகலமான பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர் ரன்வீர் சிங், நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த படத்தின் வசனப்பகுதிகளை கவனித்துக்கொள்ளும் பாடலாசிரியர் விவேக் மற்றும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டனர். இதேபோல் இயக்குநர் லிங்குசாமியும் இந்த பட விழாவில் கலந்துகொண்டார்.

அத்துடன் இந்நிகழ்வில் ஷங்கரின் மகளும் தற்போது ஹீரோயினாக உருவெடுத்திருப்பவருமான அதிதி ஷங்கர் ஆரவாரமாக வலம் வந்தார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

தற்போது சூர்யா & ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், கார்த்தி நடிக்கும் விருமன் எனும் படத்தில் அதிதி ஷங்கர் அறிமுக நாயகியாக எண்ட்ரி கொடுக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில்தான் வெளியானது. இந்த படத்தை முத்தையா இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Also Read: பசுமாட்டில், தானே பால் கறந்து டீ போட்டு குடிக்கும் பாபநாசம் பட நடிகை..! வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Aditi Shankar viral reels video RC15 event அதிதி ஷங்கர்

People looking for online information on Aditi Shankar, Jyothika, Karthi, Ram Charan, RC15, Shankar, Suriya, Yuvan Shankar Raja will find this news story useful.