www.garudabazaar.com

Video: செம பாயிண்ட்! நறுக்குன்னு 'கேள்வி' கேட்ட சோம்... தடுமாறிப்போன ஆரி?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுச்சி வரவால் நாளுக்குநாள் பிக்பாஸ் வீடு போர்க்களமாக மாறி வருகிறது. தினசரி எத்தனை சண்டைகள் என்பதே மறந்து போய்விடும் போல. அந்தளவுக்கு மாறி,மாறி சண்டை போடுகின்றனர். இந்த வாரம் ஆரி,  அர்ச்சனா, சுரேஷ், சோம், அனிதா, சனம் ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

Somasekhar's unseen video goes viral on Social media

இதில் அதிகம் கண்டெண்ட் கொடுக்காததால் சோம் வெளியே செல்வார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.  ஆனால் தற்போது இந்தநிலை மெல்ல மாறி வருவது போல தோன்றுகிறது. நேற்று பாலாஜிக்கு எதிராக சோம் தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொன்ன விதம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேபோல ஆரிக்கு எதிராக சோம் பேசும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில் ரம்யா பாண்டியன், அனிதா ஆகியோருடன் ஆரி பேசிக்கொண்டு இருக்க அங்கு வரும் சோம், ஆரியுடன் நியாயமான முறையில் அமைதியாக விவாதம் செய்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவரு இவ்ளோ நல்லா பேசுவாருன்னு நாங்க நினைக்கல என சோமை பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Somasekhar's unseen video goes viral on Social media

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.