ஆத்தீ! அப்படியே 'நம்மள' மாதிரி இருக்காரு... பறக்கும் 'மீம்ஸ்'கள் யாருக்குன்னு பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன் என இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே எண்ட்ரி கொடுத்து இருக்கின்றனர்.

கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் இந்தமுறை பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் காணொளி காட்சி மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டின் உள்ளே சென்ற அனைவரும் சக போட்டியாளர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.
Tag Your Friends Who Secretly அமுக்கிங் all the Leg Pieces in பிரியாணி பார்சல் 😂😂#RioRaj #AntiRioArmy #BiggBossTamil4 #BiggBossTamil#பிக்பாஸ் pic.twitter.com/ddtYU5l5nJ
— Kapilan Sachchithananthan (@iamkapilan) October 4, 2020
ஆனால் முதல் போட்டியாளராக சென்ற ரியோவின் கவனம் சிக்கன் பிரியாணி பக்கம் திரும்ப, டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாரு வந்தா நமக்கென்ன பாஸ்? நமக்கு சோறு தான் முக்கியம் என ரியோவுக்கு மீம்ஸ் போட்டு அவரை தங்கள் இனம் என சமூக வலைதளங்களில் பெருமையாக தெரிவித்து வருகின்றனர்.
#biggbosstamil4#Sooru mukiyum Bigilu pic.twitter.com/8oFbjBjp8f
— The Jokers Grin_ (@IDinezTweet) October 4, 2020