www.garudabazaar.com

இந்த 'வலிமை' பட பிரபலம் AK61 படத்திலயும் இருக்காரா? வைரலான செம்ம இன்ஸ்டாகிராம் போஸ்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா இசையில், தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. பின்னர் நேர்கொண்ட பார்வை படத்தின் அதே வெற்றிக்கூட்டணி மீண்டும் வலிமை படத்தில் இணைந்தது.

Valimai Editor Instgram Post goes Viral on social media AK61

ராமாக Dulquer.. சீதாவாக மிருணாள்.. போருக்கு நடுவே பூத்த காதல் கதை! பட டைட்டிலுடன் வெளிவந்த போஸ்டர்

அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் இன்று துவங்கி உள்ளது.

Valimai Editor Instgram Post goes Viral on social media AK61

AK 61 படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் AK61 படத்தின் பூஜை இன்று காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் இன்று முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதற்காக படக்குழு ஐத்ராபாத் சென்றுள்ளது.

Valimai Editor Instgram Post goes Viral on social media AK61

படக்குழுவில் அங்கம் வகிக்கும் நபர்களின் பெயர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

ஐதராபாத்திற்கு போனி கபூர் நேற்று விரைந்தார். இதே போல் வலிமை படத்தின் எடிட்டர் விஜய் வேலுக்குட்டியும் ஐதராபாத் நகருக்கு விரைந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Valimai Editor Instgram Post goes Viral on social media AK61

வலிமை படமும் ஸ்பாட் எடிட்டிங் முறையில் தான் படத்தொகுப்பு செய்யப்பட்டது. அதே போல இந்த புதிய படத்திற்கும் ஸ்பாட் எடிட்டிங் முறையில் படத்தொகுப்பு செய்ய விஜய் வேலுக்குட்டி ஐத்ராபாத் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

புதிய படத்தில் தனுசுக்கு ஹீரோயினான வெளிநாட்டு நடிகை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

தொடர்புடைய இணைப்புகள்

Valimai Editor Instgram Post goes Viral on social media AK61

People looking for online information on Ajithkumar, AK61, Valimai Editor, Valimai Editor Instgram Post will find this news story useful.