www.garudabazaar.com

வடிவேல் பாலாஜி பற்றி அறியாத விஷயங்கள் சொல்லும் VJ ரம்யா.!! ''ஒரு வாரத்துக்கு பிறகு..''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேல் பாலாஜி பற்றி பல நினைவுகளை விஜே ரம்யா ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார். 

வடிவேல் பாலாஜி பற்றி விஜே ரம்யா | VJ Ramya opens on memories with late vadivel balaji

சின்னத்திரை காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனிடையே, உடல்நல கோளாறு காரணமாக, கடந்த 10-ஆம் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

வடிவேல் பாலாஜி பற்றி விஜே ரம்யா | VJ Ramya opens on memories with late vadivel balaji

இந்நிலையில் தற்போது விஜே ரம்யா வடிவேல் பாலாஜி குறித்து எமோஷனலான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ''வடிவேல் பாலாஜி அவர்களின், முதல் ஷோவில் நான் தான் தொகுப்பாளராக இருந்தேன். முதன்முதலில் அவரை பார்த்த போது, நிஜமாகவே வடிவேலு தான் வந்திருப்பதாக நினைத்தேன். பிறகு அருகில் சென்று பார்த்த போதுதான், அது அவரில்லை என தெரிந்தது. அபாரமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் வடிவேல் பாலாஜி'' என அவர் தெரிவித்தார். 

மேலும் வடிவேல் பாலாஜி இறந்து ஒரு வாரத்திற்கு பிறகு, அவரின் நினைவுகள் இன்று வந்ததாகவும், அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து விஜே ரம்யா பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ. 

 

வடிவேல் பாலாஜி பற்றி அறியாத விஷயங்கள் சொல்லும் VJ ரம்யா.!! ''ஒரு வாரத்துக்கு பிறகு..'' வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜி பற்றி விஜே ரம்யா | VJ Ramya opens on memories with late vadivel balaji

People looking for online information on Vadivel Balaji, VJ Ramya will find this news story useful.