www.garudabazaar.com

காமெடியன் வடிவேல் பாலாஜி மரணம்... நேரில் சென்ற விஜய் சேதுபதி அஞ்சலி... காரணம் இதுதான்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி புகழ் பாலாஜி இன்று காலை சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது.

வடிவேல் பாலாஜிக்கு விஜய் சேதுபதி அஞ்சலி | vijay sethupathi pays homage to actor vadivel balaji

இந்நிலையில் அவரது உடலுக்கு நடிகர் விஜய சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார். இந்த காட்சி பார்ப்பவர்களை கலங்க செய்தது. இதற்கு பின்பு ஒரு நெகிழ்ச்சியான காரணம் இருக்கிறது. அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக விஜய் சேதுபதியை சந்தித்து பற்றி அவரே ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறும்போது ஒருநாள் அது இது எது நிகழ்ச்சிக்கு விஜய் சேதுபதி வந்துள்ளார். கேரவேனில் விஜய் சேதுபதி அங்கே தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் பாலாஜியை  பார்த்தவுடன் திடுக்கிட்டு எழுதியுள்ளார்.  உடனே வடிவேல் பாலாஜி அவரிடம் மன்னிப்பு கேட்டு வெளியே நகர முயல, அவரை அழைத்த விஜய் சேதுபதி "நீங்கள் வேற லெவல் காமெடி பண்றீங்க. எப்படி இவ்வளவு டைமிங் சென்ஸ் உங்களுக்கு வருகிறது. உங்களுக்கு படம் நடிக்க ஆசை இருக்கிறதா. கவலைப்படாதீர்கள் நாம சேந்து பண்ணுவோம்" என்று அவர் கூற வடிவேல் பாலாஜி அந்த சம்பவத்தை மகிழ்ச்சியுடன் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.

காமெடியன் வடிவேல் பாலாஜி மரணம்... நேரில் சென்ற விஜய் சேதுபதி அஞ்சலி... காரணம் இதுதான்...! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜிக்கு விஜய் சேதுபதி அஞ்சலி | vijay sethupathi pays homage to actor vadivel balaji

People looking for online information on Homage, Vadivel Balaji, Vijay Sethupathi will find this news story useful.