சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார் - இது நம்ம விவேக் வெர்ஷன் - செம மாஸ் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விவேக் சமீபத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்திருந்த தாராள பிரபு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விவேக்கின் ஒவ்வொரு டைமிங் டயலாக்கும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்கவைத்தன.
![Vivekh's version of Superstar Rajinikanth's Darbar is going viral | ரஜினிகாந்த்தின் தர்பார் பட விவேக் வெர்ஷன் செம வைரல் Vivekh's version of Superstar Rajinikanth's Darbar is going viral | ரஜினிகாந்த்தின் தர்பார் பட விவேக் வெர்ஷன் செம வைரல்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vivekhs-version-of-superstar-rajinikanths-darbar-is-going-viral-photos-pictures-stills.jpg)
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 'தர்பார்' பட மாஸான தீம் மியூசிக் பின்னணியில் ஒலிக்க நடிகர் விவேக் ஸ்டைலாக நடப்பது, சிகரெட் தூக்கிப்போட்டுப் பிடிப்பது போன்ற வீடியோ க்ளிப்புகளை ஒருங்கிணைத்து எடிட் செய்து வீடியோவாக ரசிகர் ஒருவர் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவில் நடிகர் விவேக்கின் ஸ்டைலை பாராட்டி ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலளித்த விவேக், ரசிகர்களின் மகிழ்ச்சிக்காக செய்யப்பட்டது. நன்றி என்று கமெண்ட் செய்துள்ளார்.
Just to make the audience happy!! Thank you https://t.co/PCWouro3lU
— Vivekh actor (@Actor_Vivek) April 21, 2020
Tags : Vivekh, Darbar, Rajinikanth