'போகட்டும் கொரோனா' தாராள பிரபு வரானா... இப்போதைக்கு 'அப்பீட்டு' அப்புறமா ரிப்பீட்டு!
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்த தாராள பிரபு திரைப்படம் கொரோனா பாதிப்பால் திரையரங்கம் மூடப்பட்டதை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

அரசாணைக்கு இணங்க மார்ச் 31-ம் தேதி வரை திரைப்படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் தாராள பிரபு திரைப்பட குழுவினர் கவலையில் உள்ளனர். திரைப்படத்தின் ஹீரோ ஹரீஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றியை தெரிவித்ததோடு மறுவெளியீட்டின் போது தங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நகைச்சுவை நடிகரும், தாராள பிரபுவில் முக்கிய வேடமேற்று நடித்திருந்தவருமான நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கே உரியே பாணியில், ''போகட்டும் கொரோனா! மீண்டும் தாராளப் பிரபு வரானா! ரிலீஸ் தரானா? என்று காத்திருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு .... இப்போதைக்கு அப்பீட்டு, அப்புறமா ரிப்பீட்டு, '' என தெரிவித்து இருக்கிறார்.
போகட்டும் கொரோனா! மீண்டும் தாராளப் பிரபு வரானா! Re release தரானா? என்று காத்திருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு..... “ இப்போதைக்கு அப்பீட்டு; அப்புறமா ரிப்பீட்டு”- ok!!? https://t.co/vyp4l324gh
— Vivekh actor (@Actor_Vivek) March 17, 2020