''இப்போ விலகி இருப்பது...'' - விஷ்ணு விஷாலின் பதில்... அதுக்கு அவரது தோழியின் Reaction பாருங்க !
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா வைரஸின் காரணமாக இந்தியாவில் 21 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக தற்போது பிரபலங்கள் சிலரின் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பேட்மிண்டன் வீராங்கணை ஜ்வாலா நடிகர் விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ''Missing My Boo''என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு விஷ்ணு விஷால்,' ஒகே, ஆனால் மக்களுடன் தற்போது விலகி இருப்பது முக்கியம். எல்லோருக்காகவும் வேண்டிக்கொள்கிறேன்'' என்று பதிலளித்துள்ளார். அதனை வரவேற்பது போல ஜ்வாலா, ஹார்ட் எமோஜியை பகிர்ந்துள்ளார்.
எளிதில் பரவக்கூடியது என்பதால் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மக்கள் வீட்டில் தனித்திருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசியம் இருந்தால் மட்டுமே வெளியில் வரவேண்டும், மாஸ்க் அணிந்து கொள்வது அவசியம், கைகளை நன்றாக கழுவ வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
Its oki..Right now social distancing is important..🙏pray for all...🤗 https://t.co/al7iPw261N
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) March 28, 2020