பிரச்னை தீர்ந்து இன்று வெளியானது 'அயோக்யா'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிய விஷாலின் அயோக்யா ஒருவழியாக அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து இன்று(மே 11) தியேட்டர்களில் வெளியானது.

Vishal’s Ayogya finally releases today on May 11

டெம்பர் தெலுங்கு படத்தின் தமிழ் ரீ-மேக்கான அயோக்யாவில் விஷால் நடித்திருந்தார். ராஷி கண்ணா, கேஎஸ்.ரவிக்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட் மோகன் இயக்கி உள்ளார். இப்படம் நேற்று(மே 10, வெள்ளிக்கிழமை) வெளியாக வேண்டிய சூழலில் கடைசி நேர நிதிப் பிரச்சினையால் வெளியாகாமல் போனது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான விஷால் படத்திற்கே இப்படி ஒரு நிலைமையா என கோலிவுட்டில் பேச ஆரம்பித்தனர்.

இதனிடையே, படத்தின் உள்ள சிக்கல்களைத் தீர்த்து படத்தை நேற்று வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்த விஷால், சில கோடிகளை விட்டுக் கொடுப்பதாகச் சொன்னார். இதை ஏற்று படம் இன்று(மே 11) வெளியாகி உள்ளது.

Tags : Vishal, Ayogya