விஷால் - சுந்தர்.சியின் அதிரடி ‘ஆக்ஷன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

"வந்தா ராஜாவாதான் வருவேன்” படத்தைத்தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.C அவர்கள் இயக்கிக் கொண்டிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

Vishals Action is all set to Release On November 15th

மத கஜ ராஜா மற்றும் ஆம்பள படங்களைத் தொடந்து இயக்குனர் சுந்தர்.C மற்றும் நடிகர் விஷால் இணையும் மூன்றாவது படம் இந்த “ஆக்‌ஷன்” திரைப்படம்.

கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷாலுடன் மீண்டும் இந்த படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தமன்னா. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ள. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் இப்படம் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.