www.garudabazaar.com

“Poster-லயே.. Action இப்படி ஃபயர் ஆகுது”…. விஷால் படத்தின் premiere தேதியை அறிவித்த ஜி தமிழ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷாலின் சமீபத்தைய படமான வீரமே வாகை சூடும் படத்தின் தொலைக்காட்சி பிரீமியர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Vishal veerame vaagai soodum television telecast date

”மனசுக்கும் உடம்புக்கும் நடுவுல நடக்கும் போராட்டம்”… கவனம் ஈர்த்த சிட்தி பட டிரைலர்…

விஷாலின் வீரமே வாகை சூடும்…

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில்,  நடிகர் விஷால் நடிப்பில்அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கிய திரைப்படம் “வீரமே வாகை சூடும்”. இந்த படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில், என பல மொழி வெளியீடாக 2022 பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று வெளியானது. இந்த படத்தில் விஷாலோடு டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடித்திருந்தார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, RNR மனோகர்,  பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, KSG வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் Black sheep தீப்தி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இயக்குனர் சரவணன் பத்திரிக்கையாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal veerame vaagai soodum television telecast date

முன்னணி கலைஞர்கள்…

விஷாலின் ஆக்‌ஷன் படமான வீரமே வாகை சூடும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். கவின் ராஜ்  ஒளிப்பதிவு செய்ய, N.B.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு மேற்கொள்ள, S.S.மூர்த்தி கலை இயக்கம் செய்ய, வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார். ஒலி அமைப்பை தபஸ் நாயக் செய்ய, அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் சண்டைகாட்சிகளை வடிவமைத்தனர்.

Vishal veerame vaagai soodum television telecast date

அதிகார மட்டத்திற்கு எதிராக….

கொரோனா பெருந்தொற்று மூன்றாம் அலை தளர்வுகளுக்கு பிறகு இந்த படம் திரையரங்குகளில் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியானது. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தை களமாக கொண்டு  உருவாகியுள்ள நீண்ட இடைவேளைக்கு இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் நடித்திருந்தார் நடிகர் விஷால். ஆக்‌ஷன் பட பிரியர்கள் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகி இருந்தது. திரையரங்குகளில் கவனம் பெற்ற இந்த படம் ஜி 5 ஓடிடியில் மார்ச் 4 ஆம் தேதி வெளியானது.

Vishal veerame vaagai soodum television telecast date

தொலைக்காட்சி பிரீமியர்…

இந்நிலையில் தற்போது இந்த படம் ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு உலகமெங்கும் ஒளிபரப்பாக உள்ளதாக ஜி தமிழ் அறிவித்துள்ளது. இது சம்மந்தமான பதிவில் ‘Poster-லயே.. Action இப்படி ஆகுது. வீரமே வாகை சூடும்  வரும் ஏப்ரல் 10, ஞாயிறு மாலை 6.00 மணிக்கு.’ எனக் கூறியுள்ளது.

Bharathi Kannamma: "வெண்பாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல".. Bigg Boss நடிகையின் மாஸ் எண்ட்ரி

தொடர்புடைய இணைப்புகள்

Vishal veerame vaagai soodum television telecast date

People looking for online information on Thu Pa Saravanan, Veerame Vaagai Soodum, Vishal, Yuvan Shankar Raja will find this news story useful.