Radhe Others USA
ET Others
www.garudabazaar.com

பிரபல OTT-யில் வெளியாகும் விஷ்ணு விஷால் நடித்த FIR..! எப்போ? எதுல?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த FIR படம் ஒடிடியில் வெளியாக உள்ளது.

VISHNU VISHAL-STARRER FIR LAUNCHES ON PRIME VIDEO ON 12 MARCH

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில்,  “எஃப் ஐ ஆர் (FIR)” படத்தை நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். பரபரப்பான கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கடந்த 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியானது. ரெட் ஜெயண்ட் மூவிஸ்  இப்படத்தை வெளியிட்டது.பைசல் இப்ராஹிம் ரெய்ஸ் என்பதின் சுருக்கமே FIR.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் மார்ச் 12 முதல் FIR ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

VISHNU VISHAL-STARRER FIR LAUNCHES ON PRIME VIDEO ON 12 MARCH

வெற்றிகரமான திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு, மார்ச் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.  இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.

VISHNU VISHAL-STARRER FIR LAUNCHES ON PRIME VIDEO ON 12 MARCH

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லராக இருக்கும் இப்படம் , இர்ஃபான் (விஷ்ணு விஷால்) ஒரு சாதாரண வாழ்க்கையைக் கொண்ட ஒரு அப்பாவி இஸ்லாமிய மனிதர், தீவிரவாதம் என்று பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளால் சிறையில் அடைக்கப்பட்ட பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் அவரது பயணம்தான் படத்தின் கதை. 

இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் தோனி கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் அஷ்வத் இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

VISHNU VISHAL-STARRER FIR LAUNCHES ON PRIME VIDEO ON 12 MARCH

People looking for online information on Amazon Prime, FIR, OTT, Vishnu Vishal will find this news story useful.