www.garudabazaar.com

“காது வரைக்கும் சிரிச்சேன்… எல்லோருக்கும் Teddy bear hugs”… ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி story!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நெகிழ்ச்சியாக தனது அன்பைப் பகிர்ந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Rashmika mandanna overjoy about her birthday wishes

20 கால்பந்தாட்ட வீரர்கள் நடித்த 'போலாமா ஊர் கோலம்' திரைப்படம்.. சுவாரஸ்ய தகவல்கள்..

Upcoming ராஷ்மிகா…

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party என்ற படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது. 2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் வெற்றியால் இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து வெற்றிப் படங்களிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.

Rashmika mandanna overjoy about her birthday wishes

தளபதி 66….

விஜய் நடிப்பில் தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கும் புதிய படமான ‘தளபதி 66’ படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சென்னையில் நடந்த படத்தின் பூஜையில் அவர் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்தார். பூஜையில் விஜய்யோடு ராஷ்மிகா இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய்யோடு இருக்கும் உற்சாகத்தில் முகம் முழுவதும் மகிழ்ச்சியாக ராஷ்மிகா கொடுத்த ரியாக்‌ஷன்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதில் ஒரு புகைப்படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு திருஷ்டி முறிப்பது போல இருக்கும் இணையத்தில் வைரலானது.

Rashmika mandanna overjoy about her birthday wishes

Teddy bear hugs…

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை ராஷ்மிகா கொண்டாடினார். அதையடுத்து ரசிகர்கள் மற்றும் சக திரையுலக கலைஞர்கள் அவருக்கு சமூகவலைதளம் மூலமாக வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு தற்போது பதிலளித்துள்ளார் ராஷ்மிகா. அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் ‘ஹாய் மை லவ்ஸ்… நான் ரொம்ப தாமதமாகதான் பதிலளிக்கிறேன் என்று எனக்கு தெரியும். என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னால் முடிந்த அளவுக்கு எல்லோரின் வாழ்த்துகளுக்கும் பதிலனுப்பினேன். அதில் யாருக்காவது விடுபட்டு இருந்தால் கோபப்பட வேண்டாம். அனைவரும் என்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியான தினமான மாற்றிவிட்டீர்கள். உங்கள் அனைவரின் வாழ்த்துகளாலும் காதுவரைக்கும் சிரித்து மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி. உங்கள் அனைவர் மீதும் நான் அன்பு வைத்திருக்கிறேன். உங்கள் teddy bear hugs’ என நெகிழ்ச்சியாக தனது அன்பைப் பகிர்ந்துள்ளார்.

Rashmika mandanna overjoy about her birthday wishes

ஆஸ்கர் நாயகனும், ஆர்.பார்த்திபனும் - இரவின் நிழல் இசை விழா .. பாரதிராஜா வேண்டுகோள்.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika mandanna overjoy about her birthday wishes

People looking for online information on Rashmika Mandanna, Thalapathy 66, Thalapathy Vijay 66 Movie, Vijay will find this news story useful.