”மனசுக்கும் உடம்புக்கும் நடுவுல நடக்கும் போராட்டம்”… கவனம் ஈர்த்த சிட்தி பட டிரைலர்…
முகப்பு > சினிமா செய்திகள்சிட்தி என்ற படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இதன் தமிழ் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
“காது வரைக்கும் சிரிச்சேன்… எல்லோருக்கும் Teddy bear hugs”… ராஷ்மிகாவின் நெகிழ்ச்சி story!
சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக திரு.மகேஷ்வரன் நந்தகோபால் தயாரிப்பில் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிரைம் திரில்லராக உருவாகியிருக்கும் படம் 'சிட்தி' ( SIDDY ). இப்படத்தில் முக்கிய வேடத்தில் I. M. விஜயன், ராஜேஷ் சர்மா, ஹரி கிருஷ்ணன், சிஜீ லால், வேணு மரியாபுரம், சொப்னா பிள்ளை, மதுவிருத்தி, திவ்யா கோபிநாத், தனுஜா கார்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்துக்கு கார்த்திக் S. நாயர் ஒளிப்பதிவு செய்ய, ரமேஷ் நாராயணன் இசையமைக்கிறார். சீனிவாச மூர்த்தி வசனம் எழுத, சினேகன், மலர் வண்ணன் பாடல்களை எழுதுகின்றனர். அஜித் உன்னிகிருஷ்ணன் எடிட்டிங் செய்கிறார், சாமி பிள்ளை நடனம் அமைக்கிறார், பவன் சங்கர் ஸ்டண்ட் அமைக்கிறார். பயஸ் ராஜ் (Pious Raj) இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
கதை என்ன?
சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவன் " சிட்தி " தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கொலையாளியாக மாறுகிறார். அவர் ஏன் கொலையாளியாக மாறினார் ? இறுதியில் என்ன நடந்தது ? என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.
இசை விழா
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, இப்படம் விரைவில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா, சென்னையில் இனிதே நடைபெற்றது.
இவ்விழாவினில் தயாரிப்பாளர் திரு.மகேஷ்வரன் நந்தகோபால் பேசியது…
சிறப்பு விருந்தினர் அனைவருக்கும் நன்றி. சூர்யா பிலிம் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் முதல் படம் சிட்தி. இது ஒரு கூலான திரில்லர் படமாக இருக்கும். புதுமையான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நாயகி அக்ஷயா உதயகுமார் பேசியதாவது…
முதல் முறை ஒரு மேடையில் தமிழ் பேசுகிறேன் எல்லோருடைய வாழ்க்கையிலும் முதன் முதலாக நடக்கும் சம்பங்கள் மிக சந்தோசமாக இருக்கும் அப்படிப்பட்ட கனவு தான் எனக்கு “சிட்தி” படம். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணன் பேசியதாவது..,
நான் 100 படங்களுக்கு மேல் பல மொழிகளில் வேலை செய்துள்ளேன். ஒரு படத்தில் மொத்த படக்குழுவினரும் நன்றாக இருந்தால் தான் படம் நன்றாக வரும். சிட்தி படத்தில் மிக அற்புதமான குழுவினர் இணைந்துள்ளார்கள். எல்லோருக்கும் படம் பற்றிய புரிதல் இருந்ததாலே தான் இந்தப்படம் நன்றாக வந்துள்ளது. இயக்குநர் ஒரு நாள் எனது இந்துஸ்தானி இசையை வேறு ஜானரில் கலந்து பயன்படுத்த போவதாக சொன்னார். அவரது தெளிவு பிரமிக்க வைத்தது. இந்தப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் நன்றி.
நடிகை கன்னிகா பேசியதாவது…
நான் மனோகரி படத்தில் வேலை செய்துள்ளேன் இந்தப்படம் பற்றி தெரியும் படம் நன்றாக வந்துள்ளது. மிக நல்ல தயாரிப்பாளர் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் நன்றி.
இயக்குநர் பயஸ் ராஜ் பேசியதாவது…
இந்தப்படம் மிக சிறந்த திரில் அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் மிக சிறப்பான இசையை தந்திருக்கிறார். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
Bharathi Kannamma: "வெண்பாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல".. Bigg Boss நடிகையின் மாஸ் எண்ட்ரி
”மனசுக்கும் உடம்புக்கும் நடுவுல நடக்கும் போராட்டம்”… கவனம் ஈர்த்த சிட்தி பட டிரைலர்… வீடியோ