www.garudabazaar.com
iTechUS

பச்சை குத்திக் கொண்ட நடிகை சதா.. வீகன் டாட்டூவா..? வைரலாகும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சதா.

Actress Sadaa Tattooed on Her Right Hand Viral Video

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | பிரபல சீரியலில் மனைவியுடன் சினேகன் .. கூடவே Bigg Boss ஷிவின்.. வைரல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ..

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த அந்நியன், ஜீவா இயக்கிய 'உன்னாலே உன்னாலே', அஜித்குமார் நடிப்பில் வெளியான திருப்பதி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து, ரசிகர்கள் மத்தியில்  பிரபலமானவர்.

தமிழ் மட்டுமில்லாமல்,  தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் பல படங்களில் சதா நடித்துள்ளார். நடிகை சதா, கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'டார்ச் லைட்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சதா, அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும்,  ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். காடுகளின் வாழ்வியல் சார்ந்த போட்டோகிராஃபியில் ஆர்வமுள்ளவர் நடிகை சதா.

Image Cedit : sadaa17 Instagram

இந்நிலையில் நடிகை சதா தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பச்சை குத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் வீகன் டாட்டூ குத்தி உள்ளதாக பதிவிட்டு கையில் பச்சை குத்தும் வீடியோவை வெளியிட்டுள்ளார். "டாட்டூ குத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தேன்.

Image Cedit : sadaa17 Instagram 

ஏனெனில் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது அல்ல. ஆனால் இப்போது எனக்கு தெரியும். நனி சைவம் & பூனைகள் மீது நான் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளேன். நான் இருக்கும் வரை வாழ்க்கையில் அவை இருக்கும்." என சதா பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sadaa (@sadaa17)

Also Read | வீட்ல விசேஷம்!! வளைகாப்பு குறித்து பிரபல நடிகை நெகிழ்ச்சி பதிவு..!

Actress Sadaa Tattooed on Her Right Hand Viral Video

People looking for online information on Sadha, Sadha Tattoo will find this news story useful.