Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

குடும்பத்துடன் கொட்டும் அருவியில் சாய் பல்லவி..அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சாய்பல்லவி குடும்பத்துடன் தனது அம்மாவின் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Sai Pallavi with her family in waterfalls celebrate mother birthday

Also Read | வெற்றிப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் அருள்நிதி? ஆஹா செம்ம COMBO இது!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. அதற்கு முன்பாக ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா’ நடன நிகழ்ச்சியிலும் மற்றும் தாம்தூம் படத்தில் ஒரு சிறிய வேடத்திலும் நடித்திருந்தார்.

ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

Sai Pallavi with her family in waterfalls celebrate mother birthday

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன.

சமீபத்தில் வெளியான விராத பர்வம் மற்றும் கார்கி திரைப்படம் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.

Sai Pallavi with her family in waterfalls celebrate mother birthday

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தன்னுடைய தாயாரின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ & புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொட்டும் அருவியில் குடும்பத்துடன் விளையாடிய பின்னர் கேக் வெட்டி தாயாரின் பிறந்தநாளை உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடினர். சாய் பல்லவியுடன் தங்கை நடிகை பூஜா கண்ணன் உடன் உள்ளார்.

Sai Pallavi with her family in waterfalls celebrate mother birthday

சாய் பல்லவி, சில தினங்களுக்கு முன் தஞ்சை பெரிய கோயிலுக்கும், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கும் குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Sai Pallavi with her family in waterfalls celebrate mother birthday

சாய்பல்லவி அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்தில் நடிக்கிறார்.

 

Also Read | கமல்ஹாசன் நிறுவனத்தின் கதர் உடையில் ராஷ்மிகா மந்தனா.. வைரலாகும் புதிய படத்தின் சூப்பர் PHOTOSHOOT!

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi with her family in waterfalls celebrate mother birthday

People looking for online information on Sai Pallavi, Sai Pallavi celebrate her mother birthday, Sai Pallavi with her family will find this news story useful.