www.garudabazaar.com
iTechUS

டாணாக்காரனை தொடர்ந்து விக்ரம் பிரபுவின் ரெய்டு.. பிரபல இயக்குநர் உரிமம் பெற்ற கதையா?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'டாணாக்காரன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  இதனை அடுத்து மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வம் படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.

Vikram Prabhu next Raid kannada movie remake official

Also Read | Vikraman : “இப்படியே இருங்க விக்கூ.. பொண்ணுங்க சைட் அடிப்பாங்க”.. விக்ரமன் நியூ லுக் பற்றி மைனா..

இந்நிலையில் இப்போது ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் & ஜி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து S.K.கனிஷ்க், GK. G.மணிகண்ணன்  வழங்கும் கார்த்தி இயக்கத்தில் உருவாகும் 'ரெய்டு' படத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.  இப்படத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீவித்யா & அனந்திகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இப்படத்துக்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுத,  சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை மணிமாறன் கவனிக்க, கலை இயக்குநராக வீரமணி கணேசன் மற்றும் நடன இயக்குநராக பாபா பாஸ்கர் பணியாற்றியுள்ளனர்.  கே. கணேஷ் சண்டைப் பயிற்சியாளராகவும், ஆடை வடிவமைப்பாளராக மாலினி பிரியாவும் பணிபுரிந்துள்ளனர்.

இப்படம் குறித்து பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பினர், "கன்னட படமான 'டகரு'-வை நாங்கள் பார்த்தபோது அந்த கதை பிடித்துப் போய் அதை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தோம். ஆனால், அதற்கு முன்பே இயக்குநர் முத்தையா சார் இதன் உரிமத்தை பெற்றுவிட்டார் என்பதை அறிந்தோம். நாங்கள் அவரை அணுகி பேசினோம். ஆனால், அப்போது 'விருமன்' பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் உடனடியாக ரீமேக் வேலைகளில் அவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால் அவர், நாங்கள் விருப்பப்பட்டால் அவருடைய அசிஸ்டெண்ட் கார்த்தியை வைத்து படம் இயக்கவும் இந்தப் படத்திற்கு வசனங்கள் எழுதவும் ஆர்வம் காட்டினார்.

Vikram Prabhu next Raid kannada movie remake official

இயக்குநரை முதலில் நாங்கள் பார்த்தபோது அவர் இளமையாக இருந்தார். ஆனால், அவரது கதை சொல்லலில் அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லி இயக்குநர் என்பதை நிரூபித்து விட்டார். கதையை நாங்கள் இறுதி செய்த பிறகு இதில் நடிப்பதற்கு விக்ரம் பிரபு சார் மிகச்சரியாக பொருந்திப் போவார் என முடிவு செய்தோம். அவரை அணுகி பேசியபோது, அவர் உடனே சம்மதம் தெரிவித்தார். அவர் இதற்கு முன்பு பல ஆக்‌ஷன் படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் மேலும் அவரது ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்” என்றனர்.

Also Read | Manjima Mohan : அபர்ணா பாலமுரளியிடம் இளைஞரின் அநாகரிகமான செயல் .. மஞ்சிமா மோகன் பரபரப்பு ட்வீட்..

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Prabhu next Raid kannada movie remake official

People looking for online information on Vikram Prabhu will find this news story useful.