www.garudabazaar.com
iTechUS

வெளியேறிய போட்டியாளர்.. முதல்முறையாக பிக்பாஸ் வீட்டுக்குள்ள உடைஞ்சு அழுத விக்ரமன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பல நெகிழ்சிகரமான சம்பவங்கள் நடந்தவண்ணம் இருக்கின்றன.

Vikraman Breaksdown after Amudhavanan Walk away from BB

Also Read | பணப் பெட்டியுடன் வெளியேற துணிந்த அமுது?.. பரபரப்பான போட்டியாளர்கள்.. BiggBoss

Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார். இதனால் போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

Vikraman Breaksdown after Amudhavanan Walk away from BB

பண மூட்டை பற்றிய அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் பணமூட்டையை கட் செய்து தான் 3 லட்ச ரூபாயுடன் வெளியேறுவதாக பிக்பாஸிடம் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அதிலும் பண மூட்டையை போலவே நேரம் ஆக, ஆக பணத்தொகையும் அதிகரிக்கும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் திடீரென பிக்பாஸ் வீடு சோகமடைந்துள்ளது.

Vikraman Breaksdown after Amudhavanan Walk away from BB

இந்நிலையில், அமுதவாணன் வெளியேறுவதால் உணர்ச்சிவசப்பட்ட விக்ரமன் உடைந்து அழுகிறார். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன் - விக்ரமன் நல்ல நண்பர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் வலம்வந்தனர். இந்நிலையில் அமுது பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்ததையடுத்து விக்ரமன் கண்ணீர் விட்டு அழுக அங்கிருந்த அசீம், ஷிவின் ஆகியோர் அவருக்கு ஆறுதல் கூறுகின்றனர்.

Vikraman Breaksdown after Amudhavanan Walk away from BB

தொடர்ந்து, அமுதவாணனும்,"நீங்க அழக்கூடாது விக்ரமன். நீங்க எல்லாம் கெத்தா இருக்கணும்" என்றபடி அவரை கட்டியணைத்துக்கொள்கிறார். அப்போது அங்கிருந்த ஷிவின் இன்னும் இரண்டு நாட்களில் அவரை வெளியே சந்திக்கலாம் என விக்ரமனுக்கு ஆறுதல் கூறுகிறார். Finale டிக்கெட்டை ஏற்கனவே வெற்றிபெற்றிருந்த அமுதவாணன் இடையிலேயே பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்திருப்பதால் பிக்பாஸ் வீட்டினர் சோகமடைந்துள்ளனர்.

Also Read | பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக அறிவித்த போட்டியாளர்.. திடீர்னு சோகமான பிக்பாஸ் வீடு..!

தொடர்புடைய இணைப்புகள்

Vikraman Breaksdown after Amudhavanan Walk away from BB

People looking for online information on Amudhavanan, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Vikraman will find this news story useful.