பொன்னியின் செல்வன் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஒரே PHOTOல! யார் கூட தெரியுமா? வேற லெவல்-ஆ இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார்.

vikram karthi ravi ponniyin selvan movie bts image went viral

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயரம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

vikram karthi ravi ponniyin selvan movie bts image went viral

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்கிறார்.

vikram karthi ravi ponniyin selvan movie bts image went viral

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் ட்ப்பிங் பணிகள் நடந்து வருகிறது.

vikram karthi ravi ponniyin selvan movie bts image went viral

இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுடன், விக்ரம், கார்த்தி, ரஹ்மான், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி உடன் உள்ளனர். உடற்பயிற்சி மையத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

 

தொடர்புடைய இணைப்புகள்

vikram karthi ravi ponniyin selvan movie bts image went viral

People looking for online information on Jayam Ravi, Karthi, Rahman, Ravi Varman, Vikram, Vikram Prabhu will find this news story useful.