"அனிருத்-ட்ட Song வாங்குறது அவ்ளோ கஷ்டமா?".. ‘செல்லம்மா’ பாடலின் ரகசியம் உடைத்த SK! Exclusive Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிவகார்த்திகேயன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.

Sivakarthikeyan reveals doctor chellamma story Anirudh Video

முன்னதாக நயன்தாராவின் இயக்கத்தில் கோலமாவு கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது தளபதி விஜய் நடிக்கும் தளபதி65 திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இதனிடையே கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் நிலையில், இந்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை நடிகர் சிவகார்த்திகேயன்  பிஹைண்வுட்ஸ் டிவியில் Kiss Me Hug Me Slap Me நிகழ்ச்சியில் விஜே நிக்கியுடன் ஜாலியாக பகிர்ந்து பேசி இருக்கிறார்.

முன்னதாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பற்றி சிவகார்த்திகேயன் குறிப்பிடும்போது, “நான் தொலைக்காட்சி பயணத்தை தொடங்கும் போதிலிருந்தே நெல்சன் அண்ணாவுடன் பழக்கம். அவர் எப்போதும் ஸ்மார்ட் வொர்க் பண்ணுவார். நிச்சயம் நாங்கள் இருவரும் படம் பண்ண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆசைப்பட்டோம். அப்போது ஆசைப்பட்டதெல்லாம் இப்போது நடக்கிறது என்பது மகிழ்ச்சி. அதுவும் நானே தயாரிப்பாளராக, அவர் படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய சிவகார்த்திகேயன், “நடிப்பை பொருத்தவரை அடுத்தடுத்த படங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இம்ப்ரூவ் செய்து கொள்கிறோம். பாடல்கள் எழுதுவதை பொருத்தவரை எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. ஏதோ எழுத முடிகிறது. நான் எழுதுவதெல்லாம் பாடலா என்று கேட்டால்.. அது இல்லை விஷயம். ஆனால் கஷ்டம் எதுவென்றால் தயாரிப்பாளராக இருப்பதுதான். அது மிகவும் சிரமமான ஒன்று!” என குறிப்பிட்டு இருக்கிறார்.

குறிப்பாக அனிருத்திடம் பாட்டு வாங்குவது அவ்வளவு கஷ்டமா? ஏன் டாக்டர் திரைப்படத்தில் வரும் ‘செல்லம்மா’ பாடலின் ப்ரோமோ வீடியோவில் அப்படியான காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன? என்று விஜே நிக்கி கேட்டதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “(சிரிக்கிறார்) அப்படி எல்லாம் இல்லை நாங்கள் முதலில் அந்த பாடலை கேட்டு விட்டோம்.

அது நிச்சயம் ஹிட் பாட்டு என்று முடிவு செய்துவிட்டோம். அதை புரொமோட் செய்வதற்காகவே அப்படி யோசித்தோம். மற்றபடி இசையமைப்பாளர் அனிருத் அவர்களிடம் என்ன மூடு என்று சொல்லி விட்டாலே போதும். அதை அவர் சரியாக பிடித்து செய்துவிடுவார்.

இப்போது ட்ரெய்லர் முடிவில் சர்ப்ரைஸாக ஒரு பிஜிஎம் சேர்த்து இருக்காரே? அது போல்தான். மற்றபடி அந்த பாடலை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதற்காக ஜாலியாக அப்படி ஒரு வீடியோவை உருவாக்கினோம்” என்று கலகலப்பாக பேசியுள்ளார்.

மேலும் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை இணைப்பில் இருக்கும் வீடியோவில் முழுமையாக காணலாம்.

"அனிருத்-ட்ட SONG வாங்குறது அவ்ளோ கஷ்டமா?".. ‘செல்லம்மா’ பாடலின் ரகசியம் உடைத்த SK! EXCLUSIVE VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sivakarthikeyan reveals doctor chellamma story Anirudh Video

People looking for online information on Aradhana siva karthikeyan, Kiss Me Hug Me Slap Me, Sivakarthikeyan, Sivakarthikeyan interviewdoctor, Sivakarthikeyansiva karthikeyan, Tamil hit songsdoctordoctor trailerdoctor tamil movietrailer doctor movie, Trailerdoctor movie trailer, VJNIkki will find this news story useful.