"பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறோம்".. ஹவுஸ்மேட்ஸின் தெறிக்கும் வாய்ஸ்.. யார் யார்னு கெஸ் பண்ணுங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் முதன்மையானதாக மாறி வருகிறது.

BiggBosstamil5 house mates voice viral audio clip

இதுவரை நான்கு சீசன்கள் நிறைவடைந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நடிகர் கமல்ஹாசன் 4 சீசன்களை தொகுத்து வழங்கிய நிலையில் இந்த 5வது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் யாருக்கும் தெரிய வராமல் இருந்தன. இந்த நிலையில் போட்டியாளர்கள், தாங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதாக பேசியிருக்கும் ஆடியோக்கள் தற்போது விஜய் டிவி சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில் அனைவரும், “நாங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறோம்.. எங்களை வாழ்த்துங்கள்!” என்று ஒவ்வொருவராக பேசுகின்றனர். இந்த பிரபலங்களின் வாய்ஸை வைத்து யார் யார் என்று ரசிகர்கள் கணித்து வருகின்றனர்.

அந்த வகையில் இமான் அண்ணாச்சி, பாடகி சின்னப்பொண்ணு, விஜே பிரியங்கா உள்ளிட்டோரின் குரல்களை ரசிகர்கள் கணித்து இருக்கின்றனர். இன்னும் பலர், “ஆரம்பமாகிறது ரகளை” என்று பேசி வருகின்றனர்

இதுவரை 98 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து இருக்கிறது. இறுதி வெற்றியாளர் யார் என்கிற பரபரப்புதான் இந்த 100 நாட்களில் ரசிகர்களிடையே தொற்றிக்கொள்ளும். அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்கிற பரபரப்பு இப்போதிலிருந்தே தொற்றிக்கொள்ள தொடங்கிவிட்டது.

Also Read: அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமந்தா - சைதன்யா பிரிவு முடிவு.. முதல் முறை மனம் திறந்த நாகார்ஜூனா!

தொடர்புடைய இணைப்புகள்

BiggBosstamil5 house mates voice viral audio clip

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Kamal Haasan, Trending, VijayTelevision will find this news story useful.